இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்றினால் உயிரிழந்த நபர்களின் சடலங்களை இரணைதீவுக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து செலவினங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சடலங்களை அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை எடுப்பதில் , அரசாங்கம் தலையீடு செய்யவில்லை எனவும், சுகாதார தரப்பினரே அதற்கான தீர்மானத்தை எட்டியதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழந்த சடலங்களை இதுவரையில் தகனம் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



