trinco

திருகோணமலை கந்தளாய் பகுதியில் விஹாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான பௌத்த பிக்கு ஒருவரை இம்மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் மேனக்கா தமயந்தி இன்று (7) உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய விஹாராதிபதி ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கந்தளாய் பகுதியில் உள்ள விஹாரை ஒன்றுக்குச் சென்ற 12 மற்றும் 14 வயதான இரு சிறுவர்கள்இ சந்தேக நபர் தங்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தமது பெற்றோர்களுடன் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமையகைது செய்ததாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரான பௌத்த பிக்குவை இன்று தம்பலாகாமம் பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here