நுவரெலியா – மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற யுவதி ஒருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், அவரை காப்பாற்ற நீர்த் தேக்கத்தில் குதித்த இளைஞன் காணாமல் போயுள்ளார்.
இன்று (21) காலை 10 மணியளவில் தலவாக்கலை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை செய்வதற்காக கொத்மலை நீர்த் தேக்கத்தில் குதித்துள்ளார்.
இதனை கண்ட அவ்வழியில் சென்ற 32 வயதுடைய இளைஞன் ஒருவர் குறித்த யுவதியை காப்பாற்ற நீர்த்தேக்கத்தில் பாய்ந்து அந்த பெண்ணை மீட்க போராடியுள்ளார்.
இந்நிலையில் விரைந்து செயற்பட்ட தலவாக்கலை பொலிஸ் நிலைய பொலிஸ் குழுவினர் குறித்த யுவதியை மீட்டு சிகிச்சைக்காக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இருந்த போதிலும் குறித்த யுவதியை காப்பாற்ற நீர்த் தேக்கத்தில் குதித்த இளைஞனை காணாமல் போயுள்ளார். அவரை மீட்க பொலிஸார் தொடர்ந்தும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



